நான்தான் பாலா - விமர்சனம் Jenny10 நான்தான் பாலா - விமர்சனம் Neha_a10 நான்தான் பாலா - விமர்சனம் Kajal-10 நான்தான் பாலா - விமர்சனம் Ester-10 நான்தான் பாலா - விமர்சனம் Kajal-11 நான்தான் பாலா - விமர்சனம் Karthi10 நான்தான் பாலா - விமர்சனம் Zarine10 நான்தான் பாலா - விமர்சனம் Shreya10 நான்தான் பாலா - விமர்சனம் Swathi10 நான்தான் பாலா - விமர்சனம் Priyam10 நான்தான் பாலா - விமர்சனம் Hansik10 நான்தான் பாலா - விமர்சனம் Nayant11
நான்தான் பாலா - விமர்சனம் Swathi11
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Admin

https://www.facebook.com/cinemacare http://cinemacare.yours.tv https://twitter.com/cinemacare
PROMOTE PAGE

நான்தான் பாலா - விமர்சனம் Empty நான்தான் பாலா - விமர்சனம் June 17th 2014, 9:37 pm


நடிகர்கள்: விவேக், ஸ்வேதா, செல் முருகன், மயில்சாமி, வெங்கடராஜ், தென்னவன்

ஒளிப்பதிவு: மணவாளன்

இசை: வெங்கட் க்ருஷி

தயாரிப்பு: ஜே ஏ லாரன்ஸ்

இயக்கம்: கண்ணன்




நான்தான் பாலா - விமர்சனம் Vivek10

எப்போதோ ஹீரோவாகியிருக்க வேண்டிய விவேக், இத்தனை ஆண்டுகள் கழித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா. வாழ்த்தி வரவேற்போம்!

கிட்டத்தட்ட கர்ணன் - துரியோதனன் கதைதான்.

கும்பகோணம் அக்ரஹாரத்தில் தன் வயசான பெற்றோருடன் வசிக்கும் பாலா (விவேக்) ஒரு நேர்மையான பெருமாள் கோயில் பூசாரி. வீட்டில் அம்பேத்கர் படம் மாட்டி வைத்து, கோயிலில் தட்டில் விழும் காணிக்கையைக் கூட உண்டியலில் போடச் சொல்லும் அளவுக்கு நேர்மையாளர்.

பாலாவின் தந்தையை ஒரு கொலை வழக்கில் தவறாக சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவரை வெளியில் கொண்டுவர பாலாவுக்கு யாரும் உதவாத நேரத்தில், பணம் கொடுக்கிறான் பூச்சி (வெங்கட்ராஜ்) என்ற கூலிக் கொலையாளி! இருவரும் நண்பர்களாகிறார்கள்.

கொலைப்பழி அவமானத்தில் விவேக்கின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள, யாருமற்ற நிலையில் பூச்சியைத் தேடி அவன் இருக்கும் காஞ்சிபுரம் வருகிறான் பாலா. வந்த இடத்தில் தன்னுடனே இருக்குமாறு பூச்சி கேட்டுக்கொள்ள பாலாவும் சம்மதிக்கிறான். பாலாவின் நிலையைப் பார்த்து பரிதாபம் கொள்ளும் சவுராஷ்ட்ரப் பெண் வைஷாலி (ஸ்வேதா), அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பூச்சியே முடிவு செய்கிறான். அந்த நேரத்தில்தான், அவன் முன்பு கும்பகோணத்தில் செய்த ஒரு கொலை வழக்கில் அவனையும் அவனுக்கு தலைவனாக இருக்கும் தென்னவனையும் போலீஸ் தேடுகிறது. அதற்கு, பூச்சியின் நெருங்கிய நண்பன் பாலாவின் உதவியை நாடுகிறது போலீஸ்.

போலீசுக்கு பாலா உதவினானா... அந்தப் பெண்ணை மணந்தானா என்பதெல்லாம் க்ளைமாக்ஸ்.

சுவாரஸ்யமான கதைதான். ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யமாகத் தராமல், கொஞ்சம் நாடகத்தனமாக்கியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

ஹீரோவாக டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் விவேக். சிரத்தையெடுத்து நடித்திருக்கிறார் பல காட்சிகளில். எப்போதும் சிரிப்பும் ஆர்ப்பாட்டமுமாகவே பார்த்த நமக்கு, இத்தனை சீரியஸான விவேக்கைப் பார்ப்பது புதுசாகத்தான் உள்ளது. காதல் காட்சிகளிலும் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். அதற்காக காமெடியை விட்டுவிடாதீர்கள் விவேக்!

ஹீரோயினாக வரும் ஸ்வேதா கொழுக் மொழுக்கென்று தெரிகிறார். விவேக்குக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

பூச்சியாக வரும் வெங்கட்ராஜூ, கூலிக் கொலையாளி தென்னவன், லாவண்யா, சுஜாதா என எல்லோருமே தங்கள் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

செல்முருகனுக்கு இதில் தனி காமெடியனாகப் புரமோஷன்... இனி அவர் தனியாகவேகூட காமெடி செய்யலாம். அந்த அளவு சரக்கு இருக்கிறது மனிதரிடம். மயில்சாமியும் கிச்சு கிச்சு மூட்டத் தவறவில்லை.

மணவாளனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. வெங்கட் க்ருஷியின் இசையில் அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் தெரியும் தொய்வை கவனித்திருக்கலாம். எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்த இயக்குநர், அவற்றை எப்படி கச்சிதமாக வைக்க வேண்டும் என்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விவேக், நல்ல கதைக்காக ஒருமுறை பார்க்கலாம்!

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML
நான்தான் பாலா - விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum